Sunday, February 27, 2005

சாட்டைகள் மேலும் சொடுக்கப்படட்டும்!

- மன்னை மாதேவன்

பேருந்து எரிப்பு வழக்கில் நீதிபதி கனகராஜ் சொடுக்கிய சாட்டை அரசையும், காவல்துறையையும், தொடர்புடைய குற்றவாளிகளையும் எரிச்சலடைய வைத்ததோ என்னவோ, வேதனையில் துடித்த என் எழுதுகோலுக்கு சற்று ஆறுதல் ஒத்தடம் கொடுத்திருக்கிறது. ஆம் “தொலைந்தது கோப்பா, நிர்வாக கட்டுக்கோப்பா?” என்ற என் கட்டுரையில் என் ஆதங்கத்தை கொட்டியிருந்தேன். “பயிர் மேயும் வேலிகள் நீதித்துறையிலுமா?” என்ற என் கட்டுரையும் நீதித்துறையையே தொட்டுநின்றது.

இந்நிலையில், இப் பேருந்து எரிப்பு வழக்கில் இதுவரை வழங்கப்பட்டு வரும் இடைநிலைத் தீர்ப்புகள், நீதித்துறையின் மீது ஒட்டுமொத்த நம்பிக்கையும் இழக்க அவசியமில்லை என்னும் செய்தியை விளம்பிக் கொண்டிருக்கின்றன. பொதுவாக நம் போன்ற மக்கள் மீதும் ஒரு குறை கூறப்படுவதுண்டு. எந்த வழக்கிலும் ஆரம்பத்தில் உணர்ச்சி வயப்பட்டு அதிக அக்கரைக் காட்டுவது, பின்னர் கால ஓட்டத்தில் அதனை மறந்து அடுத்த சமீபத்திய வழக்கில் ஈடுபாட்டை இடமாற்றிக் கொள்வது என்பதுதான் குற்றச்சாட்டு. இதில் அதிகபட்ச உண்மை இருக்கிறது. நகர்வாலா வழக்கில் தொடங்கி ஷர்ஸத்மேதா வழக்கு ஈறாக சமீபத்திய பல வழக்குகளிலும் நம் அணுகுமுறை இதுவாகத்தான் இருந்து வருகிறது. இது சில சமயங்களில் குற்றவாளிகள் பயனடைய வாய்ப்பளித்து விடுகிறது. எனவே கணினியில் உலவும் நாமாவது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் இவ் வழக்கை தொடர்ந்து கண்காணித்து பிறருக்கும் நிகழ்வுகளை அவ்வப்போது தெரிவிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்.

No comments: